பழைய இரும்பு வியாபாரியிடம் விற்கப்பட்ட அரசின் விலையில்லா பாடநூல்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 12, 2023

Comments:0

பழைய இரும்பு வியாபாரியிடம் விற்கப்பட்ட அரசின் விலையில்லா பாடநூல்கள்



பழைய இரும்பு வியாபாரியிடம் விற்கப்பட்ட அரசின் விலையில்லா பாடநூல்கள் - Free government textbooks sold to old ironmonger

கந்தர்வகோட்டை,ஜூன் 11: கந்தர்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பழைய இரும்பு வியாபாரியிடம் அரசின் விலையில்லா பாடநூல்கள் விற்கப்பட்டதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கந்தர்வகோட்டை ஊராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நி லைப் பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான விலையில்லா பாட புத் தகங்கள், நோட்டுகள், புத்தகப் பைகள், காலணிகள் உள்ளிட்டவை களை தமிழக அரசு வழங்கி வருகின்றன. இதில், நோட்டுப் புத்தகங் களை முறையாக மாணவர்களுக்கு வழங்கவில்லை என புகார் தெரி விக்கும் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான நோட்டுகளை வெளி யில் வாங்கி வந்து படிக்கின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடநூல் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் நோட்டுகளை சுமார் ஒரு டன் அளவில் கந் தர்வகோட்டை கொத்தகம் சாலையில் பழைய இரும்பு வியாபாரி யிடம் பள்ளி நிர்வாகம் விற்பனை செய்துள்ளது. இதையறிந்த பெற் றோர்களும் பொதுமக்களும் செல்வதற்குள் பாடநூல்களை எடுத்துச் சென்றுவிட்டனர். மேலும், பாடநூல்களை மாணவர்களுக்கு தரா மல் பழைய இரும்பு வியாபாரியிடம் விற்றதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், பழைய பாடநூல்களையே விற் பனை செய்ததாக மழுப்பலாக பதில் அளித்தார்.

பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்காண்டு குறைந்து வரும் சூழலில் 1,500 மேற்பட்டோர் படித்து வந்த பள்ளியில் தற் போது 800-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறை அதிகாரிகளும் இந்தப் பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களை கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews