கிராம வங்கிகளில் 8812 காலியிடங்கள் - கடைசி நாள்: 21.6.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 14, 2023

Comments:0

கிராம வங்கிகளில் 8812 காலியிடங்கள் - கடைசி நாள்: 21.6.2023

கிராம வங்கிகளில் 8812 காலியிடங்கள்

இந்தியாவில் கிராம வங்கிகளில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை அய்.பி.பி.எஸ்., வெளியிட்டுள்ளது.

காலியிடம்: அலுவலக உதவியாளர் 5538, அதிகாரி பிரிவில் ஜெனரல் பேங்கிங் ஆபிசர் 332, ஐ.டி., 68, சட்டம் 24, சி.ஏ., 21, கருவூல அதிகாரி 8, மார்க்கெட்டிங் ஆபிசர் 3, அசிஸ்டென்ட் மானேஜர் 2685, விவசாய அதிகாரி 60 உட்பட மொத்தம் 8812 இடங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டுக்கு 204 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது: 1.6.2023 அடிப்படையில் அலுவலக உதவியாளர் 18 - 28, ஆபிசர் ஸ்கேல் மி (அசிஸ்டென்ட் மானேஜர்) பதவிக்கு 18-30, ஸ்கேல் மிமி (மானேஜர்) பதவிக்கு 21 - 32, ஆபிசர் ஸ்கேல் மிமிமி (சீனியர் மானேஜர்) பதவிக்கு 21-40, ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது. கல்வித்தகுதி: ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, அதிகாரி பணிஇடங்களுக்கு பைனான்ஸ், மார்க்கெட்டிங், விவசாயம், கால்நடை அறிவியல், அய்.டி., கம்ப்யூட்டர், சட்டம், பொருளியல், அக்கவுண்டன்சி போன்ற பிரிவுகளில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில மொழி தெரிந்திருப்பது அவசியம்.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் ஆன்லைன்

எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு.

தேர்வு மய்யம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர்.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175.

கடைசி நாள்: 21.6.2023

விபரங்களுக்கு: ibps.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews