2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து!
இதில் தமிழ்நாட்டின் ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளும் அடங்கும்!
40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து!
இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் தேசிய மருத்துவ ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது!
கல்லூரிகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றாதது, ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் வருகை பதிவு இல்லாதது, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாதது உள்ளிட்ட காரணங்கள் அடிப்படையில் நடவடிக்கை என தேசிய மருத்துவ ஆணையம் தகவல்
இது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் நாம் பேசியபோது,
“சிறு சிறு குறைபாடுகளுக்காக மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தையே ரத்துசெய்வது மிகவும் தவறானது, கடும் கண்டனத்துக்குரியது” என்றார்
மேலும் அவர், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை. அங்கு பேராசிரியர்கள் உட்பட யாரும் கிடையாது. ஒரு செங்கல் மட்டுமே இருக்கிறது.
ஆனால், மாணவர்கள் சேர்க்கை நடத்தி, ராமநாதபுரத்தில் ஒரு வாடகைக் கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்? கட்டடமே கட்டாமல் மத்திய அரசு மருத்துவக் கல்லூரியை நடத்தலாம்...
ஆனால், 1938-ம் ஆண்டு கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியில் சிசிடிவி இல்லை என்று சொல்லி அங்கீகாரத்தை ரத்து செய்வதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது” என்று ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறினார்.!
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.