நீட் தேர்வு நிறைவு... இயற்பியல் பகுதி கடினம்: மாணவர்கள் கருத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 07, 2023

Comments:0

நீட் தேர்வு நிறைவு... இயற்பியல் பகுதி கடினம்: மாணவர்கள் கருத்து

NEET Exam | நாடு முழுவதும் மதியம் தொடங்கி நடைபெற்று வந்த நீட் தேர்வு நிறைவடைந்துள்ளது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வை நாடு முழுவதும் 18,72,341 மாணவர்கள் எழுதினர். மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது, சென்னையில் உள்ள நீட் தேர்வு மையத்தில் கடும் சோதனைகளுக்கு பிறகே மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வறைக்குள் கம்மல், வாட்ச், முழுக்கைச் சட்டை அணிந்து செல்லக்கூடாது, கால்குலேட்டர், பேனா, தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை எடுத்து செல்லக்கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் நீட் தேர்வு மையங்கள் முன்பு மாணவர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர். நாடு முழுவதும் 499 நகரங்களில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சுமார் 1.47 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

நீட் தேர்வு குறித்து பேசிய மாணவர்கள், ‘இயற்பியல் கடினமாகவும் வேதியியல் நடுத்தர அளவிலும் உயிரியல் எளிமையாகவும், இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews