கமிஷனர் பதவியை ரத்து செய்ய ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தல்
ஆசிரியர்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில், பள்ளிக் கல்வி துறைக்கு இயக்குனர்பதவியே வேண்டும் என்றும், கமிஷனர்பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும்,ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வி துறையில், 2021 வரை அனைத்து நிர்வாக பணிகளும் இயக்குனரால் மேற்கொள்ளப்பட்டன.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், இயக்குனர் பணியிடம் காலியாக விடப்பட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை, கமிஷனராக நியமித்து,அவருக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டன.இதையடுத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் நேரடி கட்டுப்பாட்டில், பள்ளிக் கல்வி துறை செயல்படத் துவங்கியது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்பதால், கமிஷனரை எளிதில் அணுக முடியவில்லை.சில நாட்களுக்கு முன், பள்ளிக் கல்வி துறை கமிஷனர் நந்தகுமார், மனிதவள மேம்பாட்டு துறைக்கு மாற்றப்பட்டார்.
புதிய கமிஷனர் நியமிக்கப்படவில்லை.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கமிஷனர் பணியிடத்தை முற்றிலுமாக ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.