வருமான வரி தாக்கல் செய்ய ஆன்லைன் வசதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 24, 2023

Comments:0

வருமான வரி தாக்கல் செய்ய ஆன்லைன் வசதி

Tamil_News_large_3329077


வருமான வரி தாக்கல் செய்ய ஆன்லைன் வசதி துவங்கியது

கடந்த 2022-23ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஐ.டி.ஆர்., 1, ஐ.டி.ஆர்., 4 படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான வசதிகளை, வருமான வரித்துறை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

தனிநபர்கள், தொழில் வல்லுனர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோர் தங்களது 2022-23ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை ஆன் லைனில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை வரிமான வரித்துறை துவக்கி உள்ளது.

பிற வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான வசதிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என, வருமான வரித் துறை அதன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. வரி செலுத்துவோரின் சிரமங்களை குறைத்திட, வருமான வரித் துறை ஐ.டி.ஆர்., 1 மற்றும் ஐ.டி.ஆர்., 4 படிவங்களின் தாக்கல்களுக்கான இணையதள சேவைகளை செயல்படுத்தியுள்ளது. 2022 - 23ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, வரும் ஜூலை 31ம் தேதி கடைசி நாளாகும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84622962