10, 12ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பு வகுப்புக்கு வர கட்டாயப்படுத்தும் தனியார் மெட்ரிக் பள்ளி மீது நடவடிக்கை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
மனுவை அபாரதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.
மனுதாரருக்கு ரூ. 25,000 அபராதம் விதித்தும், அதனை அரசு பள்ளி ஒன்றின் கழிவறையை பராமரிப்பதற்காக செலவிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார், அந்த பொதுநல வழக்கின் முக்கிய சாராம்சம் என்பது தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையில் பள்ளி மாணவர்கள் தங்களை அடுத்த பள்ளி ஆண்டுகளுக்கு தயார்படுத்திக் கொள்வதற்காக விடப்பட்டுள்ளது.
மனரீதியாகவும், அவர்கள் உடல்ரீதியாகவும் அவர்களுக்கு இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆனால் நெல்லை மாவட்டத்தில் சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் பள்ளிக்கு கட்டாயம் வரவேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இது மாணவர்களை மேலும் மன அழுத்ததிற்கு உள்ளாக்கும் எனவே இது போன்ற பள்ளிகள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பதற்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இது போன்ற வகுப்புகள் தவிர்த்து ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதிக்கலாம் என்றும் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் தண்டபாணி, மற்றும் விஜயகுமார் அமர்வுக்கு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணை செய்த நீதிபதிகள் இந்த மனு என்பது ஒரு வழக்கறிஞர் தாக்கல் செய்யப்பட்டு வழக்கறிஞரால் பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை பொதுநல வழக்காக பார்க்கமுடியாது ஏனென்றால் பள்ளி மாணவர்கள் குறித்து பெற்றோர்கள் தான் மனு தாக்கல் செய்திருக்கமுடியும் அவர்களுக்கு தான் தெரியும் தங்கள் மாணவர்களை எவ்வாறு படிக்க அனுப்புவது என்பது குறித்து அவர்களுக்கு தான் தெரியும், எனவே இந்த மனுவை நாங்கள் விசாரணைக்கு அனுமதிக்க முடியாது.
மேலும் இந்த மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல என கூறி இந்த மனுவினை தள்ளுபடி செய்துள்ளனர்.
மேலும் மனுதாரருக்கு ரூ. 25,000 அபராதமும் விதித்துள்ளனர். இந்த அபராத தொகையை அரசு பள்ளி கழிவறைகளுக்கு வழக்கறிஞர் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.