பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் - Teachers fast to implement the old pension scheme!
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள்.
சென்னை: அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது, உயர்கல்வித் தகுதிக்கு ஊக்கத்தொகை, பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை நீக்கிவிட்டு மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியை கொண்டுவருவது, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பதவி மீண்டும் ஏற்படுத்துவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் மு.லெட்சுமிநாராயணன் தலைமையில் நடந்த இப்போராட்டத்தை அகில இந்திய டி பிரிவு அலுவலர் சங்க தலைவர் க.கணேசன் தொடங்கிவைத்தார். உலக தமிழ் ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் த.அமிர்தகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சு.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொருளாளர் இரா.குமார் நன்றி கூறினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.