நாகர்கோவில் மாவட்டக்கல்வி அலுவலரின் (இடைநிலை) செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 13, 2023

Comments:0

நாகர்கோவில் மாவட்டக்கல்வி அலுவலரின் (இடைநிலை) செயல்முறைகள்

நாகர்கோவில் மாவட்டக்கல்வி அலுவலரின் (இடைநிலை) செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - கன்னியாகுமரி மாவட்டம் - நாகர்கோவில் கல்வி மாவட்டம் - 2022-2023 ஆம் கல்வியாண்டு 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணாக்கர் தேர்ச்சி சரி பார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்கல் - சார்பு.

மேற்காண் பொருள் சார்ந்து நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் தேர்ச்சி சரி பார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்குதல் சார்பான அமர்வு 09.05.2023 அன்று நாகர்கோவில் டதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / உதவித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி எழுத்தருடன் தேர்ச்சி சரி பார்ப்பு அமர்வில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொண்டு தங்கள் பள்ளி தேர்ச்சிப் பட்டியலை சமர்பித்து ஒப்புதல் பெற இதன் வழி அறிவுறுத்தப்படுகிறது.

தேர்ச்சி சரிபார்ப்புக் குழுவில் இடம்பெற்ற பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அன்றையதினம் சரியாக காலை 9.00 மணிக்கு சரிபார்ப்பு மையத்திற்கு வருகைத் தந்து மாவட்டக் கல்வி அலுவலரின் அறிவுரைக் கூட்டத்தில் தவறாமல் பங்கெடுக்கவும் . தங்கள் பள்ளி தேர்ச்சி பதிவேடுகளை குறிப்பிட்ட நாளுக்கு முன்னர் முடித்து உதவித்தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைத்து தக்க ஏற்பாடுகளை செய்து விட்டு வரவும், தங்கள் "தலைமையாசிரியர் Seal" தவறாமல் எடுத்து வரவும் இதன் வழி தெரிவிக்கப் படுகிறது. தேர்ச்சி சரிபார்ப்பு மையத்திற்கு எடுத்து வர வேண்டியவைகள்:-

1) பள்ளித் தலைமையாசிரியரின் ஒப்பதல் பெற்ற 6, 7, CCA மதிப்பெண் பதிவேடு மற்றும் 8, 9 ஒருங்கிணைந்த மதிப்பெண் பதிவேடு.

2) முகப்புக் கடிதம், மதிப்பெண் பதிவுத் தாள் (6,7, CCA- மதிப்பெண் பதிவு படிவம் மற்றும் 8, 9 மதிப்பெண் பதிவு படிவம் ) - இரண்டு நகல்

3) EMIS Students list - Print (தலைமையாசிரியர் கையொப்பத்துடன்)

4) 6-9 Class Attendance. Register

5) தலைமை ஆசிரியரின் சான்று (படிவம்-3) இணைப்பு - படிவம் -1 (வகுப்பு - தேர்ச்சி சுருக்கம்)

படிவம் - 2 ( பள்ளி - தேர்ச்சி சுருக்கம்)

படிவம் -3 (தலைமை ஆசிரியர் - பள்ளித் தேர்ச்சி சான்று)

முக்கிய குறிப்புகள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews