நீட் தேர்வு : கவனிக்க வேண்டியவை என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 07, 2023

Comments:0

நீட் தேர்வு : கவனிக்க வேண்டியவை என்ன?

நீட் தேர்வு : கவனிக்க வேண்டியவை என்ன

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நாளை (மே.,7) நடக்க உள்ளது.

தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றிய விபரங்கள் : செய்ய வேண்டியவை:

*நீட் விண்ணப்பத்தில் பதிவேற்றப்பட்டபடி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றும், ஏற்கத்தக்க அடையாள அட்டையும் வைத்திருக்க வேண்டும்.

*மாற்றுத்திறனாளிகள் போன்றோர் ஏதேனும், சலுகைகள் தேர்வு மையத்தில் பெற்று இருப்பின், அதற்கான சான்றிதழ்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். *தேர்வு அறைக்குள் மருத்துவ காரணங்களுக்காக, குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் உணவு எடுத்து கொள்ள வசதியாக, வாழை பழம், ஆப்பிள் போன்ற பழங்களை கொண்டு செல்ல அனுமதி உண்டு.

*குடிநீர் பாட்டில் உட்புறம் தெளிவாக தெரியும் வகையில் இருப்பின் அனுமதிக்கப்படும். தேர்வு அறைக்குள் தண்ணீர் வழங்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

*நுழைவுச்சீட்டு, அடையாள சான்று தவிர்த்து வேறு எந்த தாள்களையும், தேர்வு அறைக்கு எடுத்து செல்ல இயலாது.

*பேனா, பென்சில், பவுச் பாக்ஸ், கால்குலேட்டர், பென் டிரைவ், ப்ளூடூத், ஸ்மார்ட் வாட்ச், ஹெல்த் பேண்டுகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாது.

*மொபைல் போன், கைக்கடிகாரம், பர்ஸ், பெஸ்ட், தொப்பி என, எவ்வித பொருட்களும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படாது.

*பேக்கிங் செய்யப்பட பொருட்களுக்கு அனுமதியில்லை.

*தேர்வு முடியும் வரை, தேர்வு அறையை வீட்டு வெளியேற அனுமதியில்லை.

தேர்வின்போது கவனிக்கப்பட வேண்டிய, முக்கிய விதிமுறைகள்:

*நேர மேலாண்மை மிகவும் அவசியம்.

*தேர்வு பிற்பகல் 2:00 மணி முதல் 5:20 மணி வரை நடக்கிறது. *தேர்வு அறையில், அமர அனுமதி துவங்கும் நேரம் : பிற்பகல் 1:15 மணி.

*முழுக்கை சட்டை அனுமதிக்கப்படாது.

* மிகவும் இறுக்கமான, பெரிய பாக்கெட், பட்டன்கள், எம்பிராய்டரி கொண்ட ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் ; இலகுவான ஆடைகளை அணியலாம்.

* குர்தா, பைஜாமா ஆடை அணிய அனுமதியில்லை.

*தேர்வு அறைக்குள் காலணிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மாணவியர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டு விபரங்கள் :

*தேர்வு நாளான்று முழு நீள, 'ஸ்லீவ்' கொண்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும். பெரிய பாக்கெட்டுகள், பெரிய எம்பிராய்டரி, பெரிய பூக்கள் அல்லது பட்டன்கள், லெக்கின்ஸ், ஜீன்ஸ் ஆடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

*மெட்டல் டிடெக்டர் வாயிலாக பரிசோதிக்கப்படும் என்பதால், காதணிகள், மூக்குத்தி, மொதிரம், நெக்லஸ், பிரேஸ்லெட், கொலுசு போன்ற நகைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews