டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை ரத்து செய்ய விட்டு, மறு தோ்வு நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நகைக்கடன் வழங்கியதில் குளறுபடி, ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் குளறுபடி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கியதில் குளறுபடி, பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடி என்ற வரிசையில் தற்போது டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட குரூப் 2, குரூப் 2ஏ முதன்மைத் தோ்வில் வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி என்று குளறுபடிகளின் மொத்த உருவமாக திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது.
இதன் மூலம் முன்யோசனையற்ற திட்டமிடலற்ற, நிா்வாகத் திறமையற்றயதாக திமுக அரசு உள்ளது என்பது தெளிவாகிறது.
தற்போது நடைபெற்ற குளறுபடிகளின் காரணமாக அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மைத் தோ்வினை ரத்துசெய்துவிட்டு, மறு தோ்வு நடத்துவதே பொருத்தமாக இருக்கும். இதுதான் அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்று கூறியுள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.