Selling students' personal details - மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிக்கினர்; அதிர்ச்சியில் பெருந்தலைகள்!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 28, 2023

Comments:0

Selling students' personal details - மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிக்கினர்; அதிர்ச்சியில் பெருந்தலைகள்!!!

மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிக்கினர்; அதிர்ச்சியில் பெருந்தலைகள்! Selling students' personal details: School officials caught; Big heads in shock!!!

பள்ளிகளில் படிக்கும் 20 மாவட்டங்களை சேர்ந்த 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, சைபர் க்ரைம் போலீசார் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு பொது தேர்வு நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் மாணவர்களின் சுய விவரங்கள் வேண்டும் என்றால் இ-மெயில் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்ற பதிவு செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து ஆடியோ ஒன்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவியது.

அந்த ஆடியோவில், தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் விருதுநகர், தென்காசி, திருச்சி, மதுரை என 20 மாவட்ட மாணவர்களின் சுய விவரங்கள் எங்களிடம் உள்ளது. இந்த விவரங்கள் உங்களுக்கு வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்தில் உள்ள பிளஸ்2 மாணவரின் சுய விவரங்களுக்கு ரூ.5 ஆயிரம், 10ம் வகுப்பு மாணவர்களின் என்றால் ரூ.3 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போன் ஆப் பணம் செலுத்தினால் பிளஸ்2 மாணவர்களின் ஒரு மாவட்ட விவரங்கள் ரூ.3 ஆயிரத்திற்கு வழங்கப்படும் என்று ஒருவர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகியது. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேநேரம், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் முகவரி, தொடர்பு எண்கள் என அனைத்து சுய விவரங்களும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் பொறியியல், தொழில் நுட்ப நிலையங்களின் நிர்வாகிகளுக்கு அவை சென்றது எப்படி என குழப்பம் நிலவியது. பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருக்கும் சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த விவரங்களை விற்பனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இந்த மோசடி பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியக்கோடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்திய போது, அனைத்தும் ஆன்லைன் மூலம் மோசடி நடந்துள்ளது. மாணர்களின் சுய விவரங்கள் அனைத்தும் வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரகசியமாக பராமரிக்கப்பட்டு வந்த தகவல் எப்படி வெளியானது என்று விசாரணை நடத்திய போது, மாணவர்களின் டேட்டாக்களை அனைத்தும் ‘ஹேக்’ செய்து அதன் மூலம் மாணவர்களின் சுய விவரங்கள் திருடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர்களின் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு இருந்தாலும், பள்ளிக்கல்வித்துறையில் அதிகாரிகள் துணை இல்லாமல் இந்த மோசடி நடக்க வாய்ப்பு இல்லை என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால், மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சிலரை நேரில் அழைத்து விசாரணை நடத்த சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதேநேரம், 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களின் சுய விவரங்கள் விற்பனை செய்த மோசடி நபர்கள், விவரங்களை பணம் கொடுத்து வாங்கிய தனியார் கல்வி நிறுவனங்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு எழுதும் மாணவர்களின் சுய விவரங்கள் வெளியான விவகாரம் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் சுய விவரங்கள் அனைத்தும் வாட்ஸ் அப் மற்றும் இ-மெயில் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது பள்ளி மாணவர்களின் விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்கப்பட்டது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கல்வித்துறை சார்பில், புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் விபரங்களும், பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில், சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபரங்கள் திருடப்பட்டு, தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டதாக, புகார்கள் எழுந்தன.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலர், காகர்லா உஷா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து, நடந்த விசாரணையில், ‛ஜி-பே' வாயிலாக, 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு, பள்ளி கல்வித்துறையில் இருந்தே, வெளி நபர்களின் ‛இ-மெயில்' முகவரிக்கு, தகவல்கள் அனுப்பப்பட்டிருப்பது தெரிந்தது.

மாநில பாடத்திட்டத்தில், சுமார் 6 லட்சம் பேர், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் 35 ஆயிரம் பேரின் தகவல் திருடி விற்கப்பட்டதை, அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரி புண்ணியக்கோடி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,‛பள்ளி மாணவர்களின் விபரங்களை, தனிநபர்கள் சிலர், பணம் பெற்று கொண்டு, 20 மாவட்டங்களைச் சேர்ந்த, வெளி நபர்களுக்கு விற்றுள்ளனர்.

இது, மிகவும் கண்டிக்கத்தக்கது.

மாணவர்களின் பாதுகாப்பை இது, கேள்விக்குறியாக்கி உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' எனக் கூறப்பட்டுள்ளது.

இப்புகார் குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews