பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 28, 2023

Comments:0

பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி

பி.எஃப். வட்டி விகிதத்தை உயர்த்தி வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு - 8.15 percent interest on Employees' Provident Fund
2022-23ம் ஆண்டிற்கான பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை ஓய்வூதிய நிதி அமைப்பு இபிஎப்ஓ அதன் கூட்டத்தின்போது நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இபிஎப்ஓ 2021-22க்கான வைப்பு நிதி மீதான வட்டியை 8.5 சதவீதத்தில் இருந்து கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் 8.1 சதவீதமாக குறைத்தது. பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு சார்பில் இன்று நடந்த கூட்டத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பணியாளர்களின் வைப்பு நிதிக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. epfo2020-21ம் ஆண்டிற்கான ஊழியர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் குழுவால் முடிவு செய்யப்பட்டது. மத்திய அறங்காவலர் குழுயின் முடிவிற்குப் பிறகு, 2022-23க்கான பணியாளர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் இபிஎப்ஓவின் ஐந்து கோடி சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. https://www.maalaimalar.com/news/national/tamil-news-jairam-ramesh-responds-on-centres-rs-319-penalty-to-ttd-regarding-fcra-588996?infinitescroll=1

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews