பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு; செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 12, 2023

Comments:0

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு; செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு; செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை

தேர்வு காலை 10:00 மணிக்கு தொடங்கி மதியம் 1:15 மணிக்கு முடிவடையும். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படிக்க கொடுக்கப்படும்.

மாணவரின் விவரங்கள் சரிபார்ப்பு காலை 10:10 மணி முதல் 10:15 மணி வரை மேற்கொள்ளப்படும். தேர்வு காலை 10:15 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடைபெறும்.

தேர்வு நாள் வழிமுறைகள்

கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்க முன்கூட்டியே தேர்வு நடைபெறும் இடத்திற்குச் செல்லவும்.

உங்கள் அனுமதி அட்டை (ஹால் டிக்கெட்) மற்றும் பள்ளி அடையாள அட்டையை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்லவும்.

மாணவர்கள் அந்தந்த பள்ளி சீருடையில் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.

தேர்வு கூடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தேர்வு அறைக்குள் மின்னணு சாதனங்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. @kalviseithi

வாரியத்தால் குறிப்பிடப்பட்ட உங்கள் சொந்த பேனா மற்றும் பிற எழுதுபொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.

விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாவால் எழுத கூடாது.

மாணவர் புகைப்படம், பதிவு எண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.

தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுத்தேர்வு குறித்த சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க வசதியாக, தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த அறை செயல்படும். 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெறலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews