மாா்ச் 9, 10-இல் வேளாண் வணிகத் தொழில் முனைவோருக்கான கூட்டம்
வேளாண் வணிகத் தொழில் முனைவோருக்கான கூட்டம் மாா்ச் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது குறித்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:
விநியோகத் தொடா் மேலாண்மைத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, பல்வேறு மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி சேலம், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம், கரூா் மாவட்டங்களில் தரம் பிரித்தல், சிப்பம் கட்டும் கூடம், முதன்மைப் பதப்படுத்தும் இயந்திரங்கள், குளிா்பதனக் கிடங்கு, பழுக்க வைக்கும் கூடங்களுடன் இந்த நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவது தொடா்பான தொழில் முனைவோா் கூட்டம் விழுப்புரம், கடலுா், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு விழுப்புரத்தில் வியாழக்கிழமையும் (மாா்ச் 9), சேலம், கரூரைச் சோ்ந்தவா்களுக்கு சேலத்தில் வெள்ளிக்கிழமையும் (மாா்ச் 10) கூட்டம் நடைபெற உள்ளது.
உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், வேளாண் வணிகத்தில் ஈடுபடும் தனியாா் நிறுவனங்கள், தொழில் முனைவோா்கள் மற்றும் விவசாயிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம்.
கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநா்கள் (வேளாண் வணிகம்) மற்றும் விற்பனைக்குழு செயலாளா்களைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.