WhatsAppல் 30 வினாடி குரல் பதிவை Statusல் வைக்கலாம் - புதிய வசதி அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 07, 2023

Comments:0

WhatsAppல் 30 வினாடி குரல் பதிவை Statusல் வைக்கலாம் - புதிய வசதி அறிமுகம்



WhatsAppல் 30 வினாடி குரல் பதிவை Statusல் வைக்கலாம் - புதிய வசதி அறிமுகம் 30 second voice recording can be put in status on WhatsApp - new feature introduced

வாட்ஸ்அப்பில் 30 வினாடி குரல் பதிவை ஸ்டேட்டஸாக வைக்கலாம்.. புதிய வசதி அறிமுகமாகிறது..

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் 30 வினாடிகள் வரை குரல் பதிவுகளை பகிரும் வசதி அறிமுகமாகிறது.

இந்த வசதி, நண்பர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளிடம் விரைவாகவும் எளிதாகவும் பதிலளிக்க உதவும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயனர்களுக்கு கூடுதல் வசதியாக, ஸ்டேட்டஸில் வலைதள இணைப்புகளை பகிரும் போது, அதன் உள்ளடக்கத்தின் படமும் அதில் காண்பிக்கும் ‘என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் 30 நொடிகள் வரை வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி, போட்டோ, விடியோ அனுப்புவதற்கும் ஆடியோ, விடியோ அழைப்புகளுக்கும் அதிகம் பயன்படுகிறது.

அந்நிறுவனமும் பயனர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது வாட்ஸ்ஆப்பில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போட்டோ, விடியோ மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 30 நொடிகள் வரையிலான வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கலாம்.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் அனைவரும் இந்த புதிய வசதியை பெறலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews