சைபர் கிரைம் காவல்துறை - பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 07, 2023

Comments:0

சைபர் கிரைம் காவல்துறை - பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு!

சைபர் கிரைம் காவல்துறை - பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு! விழுப்புரம் மாவட்ட காவல்துறை சைபர் கிரைம் காவல் நிலையம்

வடக்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.கண்ணன் இ.கா.ப.. அவர்களின் உத்தரவின் போரில். மாவட்ட காவல் கண்காளிப்பாளர் திரு.ஸ்ரீநாதா இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் பாதுகாப்பான இணையவழி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு வாரம் இன்று 06.02.2023 முதல் 10.02.2023 வரை 5 நாட்கள் மாவட்டத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம். இரயில் நிலையம், வணிக வளாகம், இணையவழி மைய கடைகள், மகளீர் குழுக்கள், வங்கிகள். நிதி நிறுவனங்கள் மற்றும் சமுக வளைதளங்களில் காவல் நிலைய அதிகாரிகளைக்கொண்டு விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதாகைகள் வைக்கவும் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். சைபர் கிரைம் தொடர்பாக கீழ்கானும் குற்றங்கள் பெருகிவரும் வேளையில் பொதுமக்கள் தங்களது சொத்துக்களை விழிப்புடன் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இணைய வழி குற்றங்கள் பற்றி விழிப்புடன் செயல்பட கீழ்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றும் படி எச்சரித்துள்ளார்.

1. அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது Credit card / Debit card Number OTP/CVV எண்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

2. Online மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்பு என வரும் போலி LINK, விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.

3. இணையத்தில் தேடி போலியான கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து தங்கள் முன்பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.

4. புகழ் பெற்ற நிறுவனங்கள் பெயர்களை பயன்படுத்தி (Naptol, Meesho) உங்களுக்கு பரிசு பொருள் விழுந்துள்தாக குறுஞ்செய்தி (அ) தபால்களை நம்பி ஏமாறாதீர்

. 5. OLX, QUIKR போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனம் இதர பொருட்களை விற்பதாக வரும் விளம்பரங்களின் உண்மைதன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாறவேண்டாம். 6. சமூக வளைத்ங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடாது மேலும் உங்களுக்கு தெரிந்த நபர்களின் வங்கி கணக்கு எண்ணில் பணஉதவி கேட்டு வரும் செய்திகளை நம்பி பணஉதவி செய்ய வேண்டாம்.

7. Unknown Link, Message, Call போன்றவற்றிற்க்கு எவ்வித பதிலும் அளிக்காமல் விடுவது நல்லது.

8. Any Desk, Quick support போன்ற Remote Access App களை பதிவறக்கம் செய்ய வேண்டாம்.

9. இலவச Wi-Fi வசதிகளை பயன்படுத்தி உங்கள் தொடர்புடைய பணபரிவர்த்தணையை தவிற்க்கவும். வங்கி கணக்குடன்

10.அறிமுகம் இல்லாத நபர்களின் Whatsapp, Telegram மூலம் அனுப்பும் QR Code Scan செய்யாதீர்கள்.

11.SWIGGY, ZOMOTO போன்ற நிறுவனங்களின் பெயரில் நீங்கள் உணவு ஆர்டர் செய்யாமலேயே உங்களுக்கு உணவு பார்சல் வந்துள்ளதாகவும் அதனை Cancel செய்ய தங்கள் மொபைலுக்கு வரும் OTP கேட்டால் தரவேண்டாம்.

12.உங்கள் உயர் அதிகாரிகளின் பெயரில் Whatsapp மற்றும் சமூக வளைதளங்களில் அல்லது வெளிநாட்டில் இருந்து Gift பொருள்கள் அனுப்புவதாக கூறினால் நம்பவேண்டாம். 13. FedEx போன்ற கூரியர் நிறுவனத்திலிருந்து உங்கள் பெயருக்கு வந்த பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும் அதனால் காவல்துறையில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாறவேண்டாம்.

மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் அல்லது https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews