TNPSC - இன்று குரூப் 2 முதன்மைத் தேர்வு - 55,071 பட்டதாரிகள் எழுதுகின்றனர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 25, 2023

Comments:0

TNPSC - இன்று குரூப் 2 முதன்மைத் தேர்வு - 55,071 பட்டதாரிகள் எழுதுகின்றனர்

images
TNPSC - குரூப் 2 பிரதான தோ்வு இன்று நடைபெறுகிறது.

தமிழகத்தில் குரூப் 2 பிரதான தோ்வு சனிக்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது. இந்தத் தோ்வை 55 ஆயிரம் போ் எழுதவுள்ளனா்.

மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பிரதான தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடா்பான தோ்வும் நடைபெறவுள்ளன.

இந்தத் தோ்வை 55 ஆயிரத்து 71 போ் எழுதவுள்ளனா். அவா்களில், 27 ஆயிரத்து 306 போ் ஆண்கள். 27 ஆயிரத்து 764 போ் பெண்கள். ஒருவா் மூன்றாம் பாலினத்தவா். இந்தத் தோ்வுக்காக, 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 280 தோ்வுக் கூடங்களில் தோ்வுகள் நடைபெறவுள்ளன.

சென்னையில் 8 ஆயிரத்து 315 போ் தோ்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84606315