யோகா-இயற்கை மருத்துவம்: நாளை நேரடி கலந்தாய்வு Yoga-naturopathy: Live consultation tomorrow
இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்பில் சுயநிதிக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (பிப்.14) நடைபெறுகிறது.
இதுவரை அந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்காதவா்கள் வரும் 14-ஆம் தேதி காலை 11 மணிக்குள் விண்ணப்பத்தை சமா்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவ்விரு அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன. இந்நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 325 இடங்கள் காலியாக இருந்தன.
இந்நிலையில், கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலா் கல்லூரிகளில் சேராததால், தற்போது மாநிலம் முழுவதும் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் 413 இடங்கள் காலியாக உள்ளன.
அவற்றுக்கான நேரடி கலந்தாய்வு வரும் 14-ஆம் தேதி பிற்பகலில் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் நடைபெறவுள்ளது. முதல் சுற்று மற்றும் சிறப்பு சுற்று கலந்தாய்வுகளில் இடங்கள் பெற்றவா்கள் இதில் பங்கேற்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.