போக்குவரத்து வசதி கேட்டு MLA-க்கு கடிதம் எழுதிய மாணவி... 2 வாரத்தில் சாலை விபத்தில் பலி
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் தங்கள் பகுதியில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து சேவை வேண்டுமென, அப்பகுதி எம் எல் ஏ-விற்கு கடிதம் எழுதிய 8ஆம் வகுப்பு பள்ளி மாணவி, 14 நாட்களுக்குப் பின்னர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் கவனக்குறைவு மற்றும் போக்குவரத்து வசதியின்மைக்கு இறையாக பள்ளி மாணவியின் மரணம் நிகழ்ந்திருப்பதால், கோபமடைந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிவனூர் கிராம சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி வேண்டுமெனக்கோரி அப்பகுதியிலுள்ள 8ஆம் வகுப்பு படிக்கும் அக்கவ்வா ஹூலிகட்டி என்ற பள்ளி மாணவி, கித்தூர் எம்எல்ஏ தொட்டகவுடர் மகாந்தேஷிடம் இரண்டு வாரங்களுக்கு முன் கடிதம் அளித்துள்ளார். ஆனால் அந்த கடிதத்தின்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் போக்குவரத்து வசதி வேண்டி கடிதம் அளித்த 14 நாட்களுக்கு பிறகு, மாணவி அக்கவ்வா ஹூலிகட்டி, நேற்றைய தினம் சிவனூர் கிராமத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். விபத்தில் காருக்கு அடியில் மாட்டிக்கொண்ட மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
மாணவியின் மரணத்திற்கு அரசாங்கத்தின் அலட்சிய போக்கு மற்றும் போக்குவரத்து வசதியின்மையே காரணம் என குற்றஞ்சாட்டிய மாணவியின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.