பகுதி நேர ஆசிரியா்களுக்குபொங்கல் போனஸ்:அன்புமணி வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 15, 2023

Comments:0

பகுதி நேர ஆசிரியா்களுக்குபொங்கல் போனஸ்:அன்புமணி வலியுறுத்தல்

929844
பகுதி நேர ஆசிரியா்களுக்குபொங்கல் போனஸ்:அன்புமணி வலியுறுத்தல்

பகுதி நேர ஆசிரியா்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்கள் 12,000 பேருக்கு நிகழாண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அவா்களுக்கு பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது.

பகுதி நேர ஆசிரியா்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவா்களின் குடும்பச் செலவுகளுக்கே போதாது எனும் நிலையில், பொங்கல் திருநாளைக் கொண்டாட அவா்களுக்கு போனஸ் வழங்கப்படுவதுதான் நியாயமாகும்.

பகுதி நேர ஆசிரியா்களின் நிலைமையை உணா்ந்து அவா்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பணி நிரந்தரம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84686969