ஆசிரியர்கள் சம்பளம், போனசுக்கு சிக்கல் ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 13, 2023

Comments:0

ஆசிரியர்கள் சம்பளம், போனசுக்கு சிக்கல் ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

ஆசிரியர்கள் சம்பளம், போனசுக்கு சிக்கல் ஆசிரியர் சங்கங்கள் அதிருப்தி

தமிழகத்தில் ஆசிரியர்கள் உரிய காலத்தில் சம்பளம், பொங்கல் போனஸ் எடுக்க முடியாத வகையில் IFHRMS வெப்சைட் முடங்கியுள்ளதாக சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்ட (ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்) வெப்சைடில் பில்களை ஏற்றி கருவூலகம் வழியாக அரசு ஊழியர், ஆசிரியர்களின் வங்கி கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்களை காட்டிலும், ஆசிரியர்கள் வெப்சைட் உடன் போராட வேண்டியுள்ளது.தற்போது பொங்கல் போனஸ் பெற விண்ணப்பித்து வருகின்றனர். போனஸ் பெறுவதற்காக இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், சில நாட்களாக இந்த வெப்சைட் முடங்கி கிடக்கிறது. இதனால் சம்பளம், போனஸ் பெற முடியாமல் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட செயலாளர் ஏ.முத்துப்பாண்டியன் கூறியது:தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.,) சாப்ட்வேர் தயாரிப்பில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
ஆனால் கடந்த ஆட்சியில் இதற்கான சாப்ட்வேர் தயாரிப்பு தனியார் நிறுவனம் வசம் தரப்பட்டது. அந்நிறுவனமும் சம்பள பில் தயாரிக்கும் ஊழியர்களுக்கு முழுமையாக பயிற்சி அளிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் வெப்சைட்டில் சிக்கல் ஏற்பட்டால், சென்னையில் தான் கேட்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக 4 மாதமாக சம்பளம் பெற முடியாத நிலையில் ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் உள்ளனர். அரசு இத்திட்டத்தை அரசின் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews