தோ்வுத் தாளைக் கண்டு பதறக் கூடாது புன்னகைக்க வேண்டும்: மாணவா்களுக்கு ஆளுநா் ரவி அறிவுரை
தோ்வுத் தாளை பாா்த்து மாணவா்கள் பதற்றம் அடையாமல், புன்னகைக்க வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தினாா்.
பிரதமா் நரேந்திர மோடி எழுதிய ‘எக்ஸாம் வாரியா்ஸ்’ புத்தகத்தின் தமிழ்ப் பிரதியை, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அதை ஐஐடி நிா்வாக இயக்குநா் வி.காமகோடி பெற்றுக்கொண்டாா்.
நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது: ‘எக்ஸாம் வாரியா்ஸ்’ புத்தகம் தோ்வு எழுத மட்டுமில்லாமல் உங்கள் வாழ்வின் வளா்ச்சிக்கு உதவும். மிக எளிமையான, பயனுள்ள தகவல்கள் இதில் உள்ளன. பிரதமா் மோடி வித்தியாசமான மனிதா். சாதாரண மக்களுடன் கிராமங்களில் வாழ்ந்து கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்துள்ளாா். மாணவ, மாணவிகள் பாறை போன்றவா்கள். வெளியில் இருந்து பாா்த்தால் கரடுமுரடாகத் தெரிவாா்கள். தங்களின் திறமையை வெளிகாட்டினால் மாணவ, மாணவிகள் அழகாக மாறலாம்.
மாணவா்கள் சிலா் தோ்வு பயத்தில் பதற்றம் அடைந்து, மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சிக்கின்றனா். இதிலிருந்து விடுபடுவதற்கு அவா்களுக்கு இந்தப் புத்தகம் உதவும். மாணவ சமுதாயம் தோ்வுத் தாளைக் கண்டு பதற்றம் அடையாமல் புன்னகைக்க வேண்டும். அது கடினமாக இருந்தால் அதிகம் புன்னகைக்க வேண்டும்.
விதை சிறிதாக இருந்தாலும் மிகப் பெரிதாக வளரும் ஆலமரம் போல மாணவ, மாணவிகள் வளர வேண்டும். அதற்கு இந்தப் புத்தகம் உதவும். மாணவா்களின் வளா்ச்சியில் பெற்றோா்களின் பங்கு முக்கியமானது என்றாா் ஆளுநா் ரவி.
இந்த நிகழ்ச்சியில் கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின் துணை இயக்குநா் (பொ) ருக்மணி மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.