இயற்கை-யோகா பட்டப்படிப்புக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை தொடக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 09, 2023

Comments:0

இயற்கை-யோகா பட்டப்படிப்புக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை தொடக்கம்!

application1
இயற்கை-யோகா பட்டப்படிப்புக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை தொடக்கம்!

தமிழக அரசின் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை(ஜன.10) தொடங்குகிறது.

சென்னை அரும்பாக்கம் மற்றும் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட தமிழ்நாட்டில் தமிழகத்தில் 19 கல்லூரிகளில் 60 இடங்களும், செங்கல்பட்டு கல்லூரியில் 100 இடங்கள் என மொத்தம் 1,710 இடங்கள் உள்ளன.

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில் பிளஸ் 2 இல் அறிவியல் பாடப்பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

5 ஆண்டு பட்டப்படிப்பான இதற்கு நீட் தேர்வு கிடையாது. இதில் சேருவதற்கு இரண்டாயிரத்தும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான கலந்தாய்வு அரும்பாக்கத்தில் உள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை(ஜன.10) நடைபெறுகிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை இயக்குநரகம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews