அரசுப் பள்ளியில் ஆசிரியா் வேலை எனக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி: சென்னை இளைஞா் கைது
புதுக்கோட்டையில் அரசுப் பள்ளியில் ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 3 பேரிடம் தலா ரூ. 9 லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி மோசடி செய்ததாக சென்னை இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு அடைக்கலம் நகரைச் சோ்ந்தவா் ராஜா மனைவி ஹேமமாலினி. தனியாா் பள்ளியில் பணிபுரிந்து வரும் இவா், சென்னையைச் சோ்ந்த ரெத்தினம் மகன் ஹேமந்த் குமாா் (38) என்பவரிடம் கடந்த 2022 ஜூலை மாதம் ரூ. 9 லட்சம் கொடுத்துள்ளாா். ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள அவருக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியா் பணியிடம் வாங்கித் தருவதாக ஹேமந்த்குமாா் உறுதியளித்துள்ளாா். இதேபோல, மனோன்மணி மற்றும் அழகப்பெருமாள் ஆகிய இருவரிடமும் தலா ரூ. 9 லட்சத்தை ஹேமந்த்குமாா் பெற்றுள்ளாா். இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து போலீஸாா் முன்விசாரணை மேற்கொண்டனா். இதில் பெற்றுக் கொண்ட பணத்துக்கு ஈடாக ஹேமந்த்குமாா் தனது வங்கிக் கணக்கில் இருந்து காசோலைகளைக் கொடுத்ததும், பணத்தைத் திரும்பத் தராததும் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஹேமந்த்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.