பி.எப்., பிடித்தம் - தமிழக அரசு புதிய கட்டுப்பாடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 23, 2023

Comments:0

பி.எப்., பிடித்தம் - தமிழக அரசு புதிய கட்டுப்பாடு

பி.எப்., பிடித்தம் புதிய கட்டுப்பாடு PF, favorite new control

சென்னை,-'அரசு ஊழியர்களிடம், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல், பொது ஷேம நல நிதி பிடித்தம் செய்ய வேண்டாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்களின்ஊதியத்தில், 12 சதவீதத்தை, பி.எப்., எனப்படும் பொது சேம நல நிதிக்கு பிடித்தம் செய்ய, 2009 ஜன., 1ல் அரசாணை வெளியிடப்பட்டது.

கடந்த ஆண்டு நவ., 2ல், அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை மட்டும், பி.எப்., பிடித்தம் செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பி.எப்., தொகை யாருக்கேனும் 5 லட்சம்ரூபாயை தொட்டிருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்சம், 12 சதவீதம் பி.எப்., பிடித்தம் செய்ய வேண்டும்என்ற உத்தரவில் இருந்து, தளர்வு அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews