இன்ஜி., கல்லுாரி அட்மிஷன் அங்கீகாரம் பெற அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 23, 2023

Comments:0

இன்ஜி., கல்லுாரி அட்மிஷன் அங்கீகாரம் பெற அவகாசம்

Engg-college-admission-approval
இன்ஜி., கல்லுாரி அட்மிஷன் அங்கீகாரம் பெற அவகாசம் Engg., Time to get college admission approval

சென்னை:அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற, இன்ஜினியரிங் கல்லுாரிகள், மார்ச் 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து வழங்க, 'ஆன்லைன்' தளம் துவங்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ள கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டுக்கான இணைப்பைப் பெற, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம். பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., உள்ளிட்ட இளநிலை படிப்புகளிலும், எம்.இ., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., ஆகிய மேல்நிலை படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை மற்றும் கூடுதல் பாடப் பிரிவுகள் துவங்கவும், உரிய அனுமதி பெற வேண்டும்.

பேராசிரியர்களின் கல்வித் தகுதி, அனுபவம், மாணவர், ஆசிரியர் விகிதம், சம்பளம் உள்ளிட்டவற்றில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., யின் விதிகளை பின்பற்ற வேண்டும்.

பேராசிரியர்களின் கல்வித் தகுதி குறித்து, அனைத்து சான்றிதழ்கள், ஆதார், பான் கார்டு ஆகியவற்றின், அசல்களை உரிய முறையில் ஆய்வு செய்து, விபரங்களை பதிவேற்ற வேண்டும்.

இந்த விண்ணப்பப் பதிவுக்கு, மார்ச் 10 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் கல்லுாரி கள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற பிறகே, மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602040