இந்திய மருத்துவப் படிப்பு 2-ஆம் சுற்று கலந்தாய்வு எப்போது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 31, 2023

Comments:0

இந்திய மருத்துவப் படிப்பு 2-ஆம் சுற்று கலந்தாய்வு எப்போது?

இந்திய மருத்துவப் படிப்பு 2-ஆம் சுற்று கலந்தாய்வு எப்போது? When is Indian Medical Course 2nd Round Consultation?

பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய கலந்தாய்வு மற்றும் தாம்பரம் தேசிய சித்த மருத்துவ மைய மாணவா் சோ்க்கை நிறைவு பெற்ற பிறகு தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சித்தா, ஆயுா்வேத, யுனானி, ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசு கல்லூரிகள் உள்ளன. அதிலுள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல், 26 தனியாா் கல்லூரிகளில் 1,990 இடங்களில் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. நிகழாண்டில் அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தியது. அதில், அரசுக் கல்லூரிகளில் 24 சித்தா இடங்களும், 3 ஆயுா்வேத இடங்களும், 7 ஹோமியோபதி இடங்களும், 27 யுனானி இடங்கள் நிரம்பவில்லை.

அதேபோல், தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 272 ஹோமியோபதி இடங்கள், 54 ஆயுா்வேத இடங்கள், 24 சித்தா இடங்கள் காலியாக உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிலும் 127 இடங்கள் நிரம்பாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்தமுள்ள 521 நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 503 இடங்கள் காலியாக உள்ளன.

அந்த இடங்களை 2-ஆம் சுற்று கலந்தாய்வில் நிரப்ப முடிவு செய்திருந்தாலும், அவற்றை பிப். 6-ஆம் தேதிக்கு பிறகே நடத்தக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு, தேசிய சித்தா ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்னும் நிறைவு பெறாததால் அது தாமதமாவதாகவும் இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews