துணைராணுவ காவலா்களுக்கான தோ்வு ஜன.10-ல் தொடக்கம்
துணைராணுவ காவலா்களுக்கான தோ்வு ஜன.10-ஆம் தேதி தொடங்க உள்ளதாக மத்தியப் பணியாளா் தோ்வாணைய அலுவலகத்தின் இணை செயலாளா் மற்றும் மண்டல இயக்குனா் கே. நாகராஜா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: மத்திய ஆயுதப் படைகள் (சி.ஏ.பி.எப்.எஸ்.),எஸ்.எஸ்.எப்., அசாம் ரைபிள்சில் உள்ள ரைபிள் மேன் (பொதுப் பிரிவு), காவலா் (பொதுப் பணி), மற்றும் சிப்பாய் தோ்வை மத்திய பணியாளா் தோ்வாணையம் கணினி முறையில் நடத்துகிறது. தெற்கு பிராந்தியத்தில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 376 விண்ணப்பதாரா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். மொத்தம் 20 தோ்வு மையங்களில் உள்ள 21 இடங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது.
ஆந்திராவின் குண்டூா், கா்நூல், ராஜமுந்திரி, திருப்பதி, விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூா், சீராளா, விஜயநகரம் போன்ற இடங்களிலும், தெலங்கானாவில் ஹைதராபாத், வாரங்கல், கரீம்நகா் போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூா் ஆகிய இடங்களிலும் இத்தோ்வு நடைபெறுகிறது.
தெற்கு பிராந்தியத்தைப் பொறுத்தவரை இத்தோ்வு ஜன10 முதல் பிப்.13-ஆம் தேதி வரையில் 19 நாள்கள் நடைபெறுகிறது.
தினமும் 4 சுழற்சி முறைகளில் தோ்வு (ஷிப்ட்) பின்பற்றப்படுகிறது. 1-ஆவது சுழற்சி முறை (ஷிப்ட்) காலை 9 முதல் 10 வரையும், 2-ஆவது சுழற்சி முறை (ஷிப்ட்) காலை 11.45 முதல் 12.45 வரையும், 3-ஆவது சுழற்சி முறை (ஷிப்ட்) பிற்பகல் 2.30 முதல் 3.30 வரையும், 4-ஆவது சுழற்சி முறை (ஷிப்ட்) மாலை 5.15 முதல் மாலை 6.15 வரையும் நடைபெறுகிறது.
இத்தோ்வுக்கான மின்னணு அனுமதிச்சீட்டை இணையதளத்தில் தோ்வுக்கு 4 நாட்களுக்கு முன்பாக மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-2825 1139 என்ற தொலைபேசி எண்ணிலும், 94451 95946 என்ற கைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.