யுஜிசி - நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது!
உதவி பேராசியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வு வருகின்ற பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணி புரிவதற்கு மற்றும் ஆராய்ச்சி மாணவராக சேர்வதற்காக யுஜிசி-நெட் எனப்படும் தேசிய தகுதி தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகின்றது. ஆண்டுக்கு இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்படுகின்றது. இது தொடர்பாக தேர்வு முகமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘தேசிய தகுதி தேர்வு(யுஜிசி-நெட்) பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடைபெறும். கணினி அடிப்படையில் 83 பாடங்களில் இந்த தேர்வு நடத்தப்படும். ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜனவரி 17ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது
உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வினை (யுஜிசி-நெட் தேர்வு) தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
அதன்படி நடப்பாண்டுக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கு இன்று (டிச.29) முதல் வருகிற 2023, ஜனவரி 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் 2023 பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி அடிப்படையில் 83 பாடங்களுக்கு உதவி பேராசிரியர் தேர்வு நடத்தப்படும் என்று யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
யுஜிசி-நெட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.