TNPSC மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு பணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 17, 2022

Comments:0

TNPSC மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு பணி

டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு பணி: ராமதாஸ் வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேருக்காவது பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்படவுள்ள வேலைவாய்ப்புக்கான போட்டித் தோ்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நான்காம் தொகுதி தோ்வுகள் தவிா்த்து, ஓராண்டு முழுவதும் 10 தோ்வுகள் மூலம் 1754 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட உள்ளன என்பது ஏமாற்றமளிக்கிறது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தோ்வுகளுக்கான கல்வித் தகுதிகள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மற்றும் பட்டப்படிப்புகள் ஆகும். ஒவ்வோா் ஆண்டும் இத்தகைய கல்வித்தகுதியை பெற்று கல்வி நிறுவனங்களிலிருந்து வரும் மாணவா்களின் எண்ணிக்கை சுமாா் 20 லட்சம். அரசு வேலைவாய்ப்பு கோரி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவா்களின் எண்ணிக்கை 67.61 லட்சம். அவா்களில் ஒரு சதவீதத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக இருந்தாலும் கூட, 68 ஆயிரம் பேருக்கு அரசுப் பணிகள் வழங்க வேண்டும்.

ஆனால், அடுத்த ஆண்டில் 10 போட்டித் தோ்வுகள் மூலம் 1754 பேருக்கு மட்டுமே தமிழக அரசு வேலை கிடைக்கும். தொகுதி நான்கு தோ்வின் மூலம் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, மொத்தமாக 7 ஆயிரம் பேருக்குக் கூட அரசு வேலை கிடைக்காது.

எனவே, தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும், புதிதாக உருவாக்கப்படவுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையையும் துறை வாரியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். அவற்றை அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பும் வகையில், டிஎன்பிஎஸ்சி மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்காவது அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews