திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறம்;
அதிகாரம்: அன்புடைமை.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
விளக்கம்:
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
பழமொழி :
It is never too late to learn.
கற்பதற்கு காலம், நேரம் கிடையாது
இரண்டொழுக்க பண்புகள் :
1. செல்லும் இடமெல்லாம் ஒழுக்கம், நேர்மை, அன்பு எனும் விதைகளை விதைத்து செல்வேன்.
2. அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக் கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
கல்வியின் நோக்கம் மாணவர்களின் மனதை உண்மைகளால் நிரப்புவது அல்ல. அவர்களுக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். --ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸ்
பொது அறிவு :
1. காட்டு பூனையின் அறிவியல் பெயர் என்ன?
பெலிஸ் டைகிரினா.
2. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்?
மெகஸ்தனிஸ்.
English words & meanings :
ceiling -top of a room, noun. ஒரு அறையின் கூரை. sealing - setting, closing an important document or things. மூடி சீல் வைத்தல். வினைச் சொல். both homonyms
ஆரோக்ய வாழ்வு :
கஸ்டர்ட் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சீத்தாப்பழம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். இது பல்வேறு உயிரியல் செயல்முறைகளுக்கு முக்கியமானது. வைட்டமின்கள் ஏ மற்றும் சி உடன், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் கணிசமான அளவு இதில் உள்ளது. குளிர்காலத்தில் செரிமானம் குறையும் போது ஏற்படும் மலச்சிக்கலை இந்த உணவில் உள்ள நார்ச்சத்து மூலம் குணப்படுத்தும்
NMMS Q
3,9,27,4,16,64,5,25,______
விடை: 125
டிசம்பர் 01
உலக எய்ட்ஸ் நாள்
உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைபெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல்.[1] மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது
நீதிக்கதை
சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்
அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
கழுதைப் புலியோ, நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி.
அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.
பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்.
குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டுதிரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி.
மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி.
நீதி :
நம்மைவிட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.
இன்றைய செய்திகள்
01.12.22
* தமிழக கல்வித்துறை வளாகம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
* தமிழகத்தில் நவம்பர்-29வரை 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
* கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த மாளிகைமேட்டில் கிடைத்த பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு அரசு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
* தமிழகம் முழுவதும் 38 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
*எதிரிகளின் ட்ரோன்களை அழிக்க பருந்துகளை பயன்படுத்தும் இந்திய ராணுவம்.
* உலகிலேயே முதல்முறையாக மூக்கு வழி கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி: பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
* வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம்: இங்கிலாந்து நிறுவனங்கள் அறிமுகம்.
* 48,500 ஆண்டுகள் பழமையான ஜோம்பி வைரஸ்: ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.
* கடைசி ஒருநாள் போட்டியும் மழையால் ரத்து. 1-0 என தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து.
* இளவேனில் வாலறிவன், பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது - ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
* உலகக்கோப்பை கால்பந்து : ஈரானை வீழ்த்தி அமெரிக்க அணி வெற்றி.
Today's Headlines
* Tamil Nadu Education Department Campus to be called Professor Anbazhagan Education Campus: Chief Minister Stalin's announcement.
* Minister Senthil Balaji said that 26.04 lakh electricity connections have been linked to Aadhaar in Tamil Nadu till November 29.
* Tamil Nadu Chief Minister M.K.Stalin has said that a government museum will be set up there to protect the treasures found in the mansion next to Gangaikonda Cholapuram.
* 1,635 corruption cases pending for 38 years across Tamil Nadu should be completed expeditiously: Madras High Court orders.
* Indian Army uses hawks to destroy enemy drones.
* World's First Nasal Corona Vaccine Approved developed by Bharat Biotech.
* 4 Days a Week Scheme: Introduction to UK Companies
* 48,500-year-old zombie virus: discovery by European scientists
* The last ODI was also canceled due to rain. New Zealand won the series 1-0.
* Arjuna Award to Pragnananda ,ilavenil and valarivan presented by President Draupathi Murmu.
* Football World Cup: USA team wins by defeating Iran.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.