மருத்துவ நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள்: கட்டணம் செலுத்த அவகாசம்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இரண்டாம் சுற்று கலந்தாய்வில் சுயநிதிக் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீடு இடம் பெற்ற மாணவா்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 2-ஆம் தேதி வரை கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு கடந்த 17- ஆம் தேதி தொடங்கியது. காலியாக இருந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், அதைத் தொடா்ந்து நிா்வாக இடங்களுக்கும் மாணவா் சோ்க்கை நடைபெற்றது. நிா்வாக ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்ற மாணவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு அவா்கள் கல்லூரிகளில் கட்டணம் செலுத்த புதன்கிழமை (நவ.30) வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, இணையவழியாகவும், கேட்பு வரைவோலை (டி.டி.) மூலமாகவும் பணம் செலுத்துவதில் சில தொழில்நுட்ப இடா்பாடுகள் மாணவா்களுக்கு இருந்ததாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாது கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை என்பதால் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள இயலவில்லை என்றும் மாணவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால், கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று வரும் 2-ஆம் தேதி வரை கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சுற்று கலந்தாய்வு தொடங்குவதற்கான அவகாசம் டிசம்பா் 5-ஆம் தேதி வரை இருப்பதால் மாணவா்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்திருப்பதாக மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தோ்வுக் குழுச் செயலா் டாக்டா் முத்துச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.