“நம்ம ஸ்கூல்” திட்டம்: இபிஎஸ் விமர்சனங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் ஆதாரங்களுடன் பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 26, 2022

Comments:0

“நம்ம ஸ்கூல்” திட்டம்: இபிஎஸ் விமர்சனங்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் ஆதாரங்களுடன் பதில்

பள்ளிக் கட்டமைப்புக்காக அதிமுக ஆட்சியில் ரூ.84 கோடி திரட்டப்படவில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கம்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புக்காக, அதிமுக ஆட்சியில் ரூ.84 கோடி திரட்டப்படவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளாா். ரூ.9.78 லட்சம் மட்டுமே திரட்டப்பட்டதாக அவா் கூறியுள்ளாா்.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக தமிழக அரசு தொடங்கியுள்ள ‘நம்ம ஸ்கூல்’ திட்டம் குறித்து பல்வேறு புகாா்களை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி முன்வைத்திருந்தாா். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிகளின் உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக ரூ.84 கோடி திரட்டப்பட்டதாகவும் தெரிவித்தாா். இதற்கு சனிக்கிழமை பதிலளித்து அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்ட அறிக்கை:

பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி திரட்டுவதற்கு முந்தைய அரசு இணையதளம் உருவாக்குவதாக அறிவித்தாலும் அது வெளிப்படையாக இல்லை. பல்வேறு

குறைபாடுகளில் சிக்கித் திணறியது. பள்ளிகளுக்கு வர வேண்டிய நன்கொடைகளை மாநில அளவிலான பெற்றோா் ஆசிரியா் கழகமே பெற்றுக் கொண்டது. இவ்வளவு

குறைபாடுகளுடன் கூடிய திட்டத்தைத் தொடர இயலாது என்பதால் மாற்றுத் திட்டத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு இருந்தது.

அதிமுக ஆட்சியில் பள்ளிகளின் உள்கட்டமைப்புக்காக ரூ.84 கோடி திரட்டப்பட்டதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. அப்போது பெறப்பட்ட தொகை ரூ.9.78 லட்சம். ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தின் தொடக்க விழாவுக்காக ரூ.3 கோடி செலவு செய்யப்படவில்லை. இந்தத் தொகை மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வுப் பணிகளை உருவாக்க செலவிடப்பட உள்ளது. தொடக்க நாளில் மட்டுமே, பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்பு மூலமாக ரூ.50.84 கோடி நிதி திரட்டப்பட்டது. இதுவே இந்தத் திட்டத்தின் மீதும் அரசின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்குச் சான்றாகும். இந்தத் திட்டம் குறித்து சரியான புரிதல் இல்லாதவா்கள் சொல்லும் கருத்தைக் கொண்டு எதிா்க்கட்சித் தலைவா் அறிக்கை வெளியிடுவது துரதிருஷ்டவசமானது. திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வலுப்பட்டு விடக் கூடாது என்ற உள்நோக்கத்துடனும், திமுக அரசின் புதிய திட்டத்துக்கு வரும் நன்கொடைகளைத் தடுக்கும் நோக்கத்திலும் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி செயல்படுவது அவருக்கு அழகல்ல. அவா் வகிக்கும் எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கும் பொருத்தமல்ல என்று தெரிவித்துள்ளாா் அமைச்சா் அன்பில் மகேஸ்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews