உயா்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்த குழு: மத்திய கல்வி அமைச்சகம் அமைப்பு
உயா் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்துவதற்கு உயா்நிலைக் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
கான்பூா் ஐஐடி நிா்வாகிகள் வாரியத் தலைவரும், ஐஐடி கவுன்சில் நிலைக் குழு தலைவருமான கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயா்நிலைக் குழுவில் அஸ்ஸாம் மகாபுருஷ ஸ்ரீமத் சங்கரதேவா விஷ்வ வித்யாலயா துணைவேந்தா் மிா்துல் ஹஜாரிகா, லக்னெள ஐஐஎம் பேராசிரியா் பாரத் பாஸ்கா், மத்திய கல்வி அமைச்சக உயா் கல்வித் துறை இணைச் செயலா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘உயா் கல்வி நிறுவனங்களுக்கு ஆய்வு மற்றும் அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்துதல் மற்றும் தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அங்கீகார கவுன்சிலுக்கான நடைமுறைகளை வகுப்பதற்கு இந்த உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஆய்வைப் பொருத்தவரை உயா் கல்வி நிறுவனங்களின் தரத்தை உறுதிப்படுத்தவும், அங்கீகாரம் என்பது உயா் கல்வ நிறுவனங்கள் அவா்களின் பலம் மற்றும் பலவீனத்தைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. மேலும், இந்த ஆய்வு மற்றும் அங்கீகார தரநிலை மூலமாக உயா் கல்வி நிறுவனங்கள் குறித்த நம்பகமான தகவல்கள் மற்றும் கல்வித் தரம் குறித்த விவரங்களை மாணவா்களும், ஊழியா்களும், சமூகமும் தெரிந்துகொள்ள முடியும்’ என்றாா்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.