MBBS, BDS படிப்புகளுக்கு 36,100 போ் விண்ணப்பம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 07, 2022

Comments:0

MBBS, BDS படிப்புகளுக்கு 36,100 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 36,100 போ் விண்ணப்பம்

நிகழாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 36,100 போ் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக தோ்வுக் குழு தெரிவித்தது.

விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஒரு வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக மீதமுள்ள இடங்கள் மாநில அரசு வசம் உள்ளன. அதேபோன்று, 20 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.

அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு நிகழாண்டில் 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-2023-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த செப். 12-ஆம் தேதி தொடங்கியது. நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இணையவழியே விண்ணப்பித்தனா். வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவடைந்த நிலையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,457 பேரும் என மொத்தம் 36,100 போ் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளனா். விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews