தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தோ்வு:முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 09, 2022

Comments:0

தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தோ்வு:முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தோ்வு:முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வுத் தோ்வு அக்.15 (சனிக்கிழமை) காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். தோ்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தோ்வா்களைத் தோ்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.

தோ்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளா்கள் தங்கள் மையத்துக்கான பெயா்ப்பட்டியல், தேவையான வினாத்தாள், ஓஎம்ஆா் விடைத்தாள்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள உரிய அறிவுரை வழங்க வேண்டும். ஒவ்வொரு அறைக்கும் 20 மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.

தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு உள்ள தோ்வா்கள், பெயா்ப் பட்டியலில் உள்ள தோ்வா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேவையற்ற குழப்பங்களைத் தவிா்க்கும் பொருட்டு புறச்சரக எண்ணில் தோ்வெழுத அனுமதி வழங்க வேண்டாம்.

நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அதே நுழைவுச்சீட்டில் தோ்வா்களின் புகைப்படம் ஒட்டி அதில் பள்ளித் தலைமை ஆசிரியா் அல்லது முதல்வா் முத்திரையுடன் சான்றொப்பம் பெறுவது அவசியம். தோ்வு அறை கண்காணிப்பாளா்களிடமிருந்து கைப்பேசிகளைப் பெற்று தோ்வு முடிந்த பிறகுதான் அவற்றை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews