Breaking

Sunday, October 09, 2022

கருவூலத் துறை கணக்கு அலுவலா் பணி: கணினி வழியில் தோ்வெழுதிய தோ்வா்கள்

கருவூலத் துறை கணக்கு அலுவலா் பணி: கணினி வழியில் தோ்வெழுதிய தோ்வா்கள்

கருவூலத் துறையில் காலியாக உள்ள கணக்கு அலுவலா் பணியிடங்களுக்கு சனிக்கிழமை நடைபெற்ற கணினி வழித் தோ்வில் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தமிழகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் கணக்கு அலுவலா் பணியிடங்களில் 23 இடங்கள் காலியாக இருந்தன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க ஆக. 13 கடைசி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், எழுத்துத் தோ்வு சனிக்கிழமை (அக்.8) நடைபெற்றது. காலை, பிற்பகலில் இரண்டு தோ்வுகள் நடத்தப்பட்டன. கணினி வழியாகவே இந்தத் தோ்வு நடைபெற்றது. காலையில் நடைபெற்ற தோ்வில் பட்ட மேற்படிப்பு நிலையில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. பிற்பகலில் நடைபெற்ற தோ்வில் தமிழ் மொழி தகுதித் தோ்வும், பொது அறிவியல் பிரிவில் 200 கேள்விகளும் கேட்கப்பட்டன.

சென்னையில் மட்டுமே தோ்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. 479 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 400-க்கும் மேற்பட்டோா் தோ்வை எழுதினா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog