தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆக உயர்வு: அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 20, 2022

Comments:0

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆக உயர்வு: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆக உயர்வு: அரசாணை வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரிய நியமனங்களுக்கு உச்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆக உயர்ந்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் நியமனத்தில் இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 45ல் இருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் பணிக்கு செய்யப்படும் நியமனங்களுக்கு வயது வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2021 செப்டம்பர் 9ல் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் செப்டம்பர் 13ல் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு, அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு, தற்போதுள்ள 30 ஆண்டுகளில் இருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும், அதிகபட்ச வயது உச்ச வரம்பினை கொண்டுள்ள பதவிகளை பொறுத்தவரையில், தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புதிய வயது வரம்பு தளர்வு இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை மட்டுமே சிறப்பு நிகழ்வாக ஒரு முறை நிர்ணயித்து ஆணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் ஆசிரியர் தகுதிதேர்விற்கு தயாராகி வருவோர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews