தெற்கு ரயில்வேயின் கோவை மாவட்டம், போத்தனூர், பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே பணிமனைகளில் மாதம் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Trade Apprentice
காலியிடங்கள்: 1,284
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 15 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐடிஐ முடித்தவர்களுக்கு 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, ஐடிஐ படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உதவித் தொகை: பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.10.2022
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.