பள்ளி மாணவர்களுக்கு ஜாலி! - வாரத்துக்கு ஒரு நாள் புத்தக பை கிடையாது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 04, 2022

Comments:0

பள்ளி மாணவர்களுக்கு ஜாலி! - வாரத்துக்கு ஒரு நாள் புத்தக பை கிடையாது

பள்ளி மாணவர்களுக்கு ஜாலி வாரத்துக்கு ஒரு நாள் புத்தக பை கிடையாது

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநில பள்ளி கல்வித்துறை, மாணவர்களின் பாட புத்தக பைகளின் எடை தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு வகுப்பு மாணவர்களுக்கும் அரசு குறிப்பிட்ட எடையை நிர்ணயித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

கம்யூட்டர், பொது அறிவு, விளையாட்டு, உடற்கல்வி, சுகாதாரம் மற்றும் ஓவியம் உள்ளிட்ட பாடங்களை, புத்தகங்கள் இன்றி கற்பிக்கும்படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

1, 2ம் வகுப்பு மாணவர்களின் பாட புத்தக பையின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். 3, 4, மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களின் புத்தக பை எடை 1.7 கிலோ முதல் 2.5 கிலோ வரை இருக்கலாம். 6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 முதல் 3 கிலோ வரையும், 8ம் வகுப்பு படிப்போர் 2.5 முதல் 4 கிலோ எடை வரையும் எடுத்து வரலாம். 9, 10ம் வகுப்பு மாணவர்கள் 2.5 முதல் 4.5 கிலோ எடை வரை புத்தகங்களை கொண்டு வரலாம். வாரத்துக்கு ஒருநாள் குறிப்பிட்ட நாளில் புத்தக பையின்றி பள்ளிக்கு வர மாணவர்களை அனுமதிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews