நல்லாசிரியர் விருதில் சிபாரிசு?:ஆசிரியர்கள் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 01, 2022

Comments:0

நல்லாசிரியர் விருதில் சிபாரிசு?:ஆசிரியர்கள் வலியுறுத்தல்

நல்லாசிரியர் விருதில் சிபாரிசு கூடாது!:ஆசிரியர்கள் வலியுறுத்தல்

சென்னை:தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு சிபாரிசுகளை புறக்கணித்து, தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கல்வித்துறையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், மாநில அரசுகளின் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு, தேசிய விருதுக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற ஆசிரியர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில அரசின் விருதுக்கான பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு வரை ஆசிரியர் விருது வழங்கியதில், பெரிய அளவுக்கு பிரச்னைகள் ஏதுமில்லை.

ஆனால், இந்த ஆண்டு விருது பெற, கட்சி சார்பிலான ஆசிரியர்களும்; கட்சி சார்ந்தவர்களை உறவினர்களாகவும், நண்பர்களாகவும் கொண்டவர்களும், சிபாரிசு கடிதங்களுடன் அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சுற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதனால், தகுதியும், திறமையும் மிக்க உண்மையான நல்லாசிரியர்கள், தங்களுக்கு விருது கிடைக்குமா அல்லது அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளின் செல்வாக்கு பெற்றவர்களுக்கு கிடைக்குமா என அச்சம் அடைந்துள்ளனர். எனவே, சிபாரிசுகளை புறந்தள்ளி விட்டு, தகுதியும் திறமையும் உள்ளவர்களை மட்டுமே, விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சில மாவட்டங்களில், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் தரப்பிலும், சில விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவற்றையும் ஆய்வு செய்து, மாநில அளவிலான தேர்வு பட்டியலில் சேர்க்கவும் கோரிக்கை எழுந்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews