மாணவர்களின் உயிரை 'காவு' வாங்கும் முன் போதிய பஸ் இயக்குமா அரசு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 20, 2022

Comments:0

மாணவர்களின் உயிரை 'காவு' வாங்கும் முன் போதிய பஸ் இயக்குமா அரசு?

சீர்காழி சுற்று வட்டார கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் படியில் தொங்கிய படி பள்ளிக்குப் மாணவர்கள் செல்வதை தடுக்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்டு 79 கிராமங்களும் 120-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் அமைந்துள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் சீர்காழி நகருக்கு வரவேண்டி உள்ளது.

இத்தனை கிராமங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் நகர் பகுதிக்கு பயணித்து வரும் நிலையில் சீர்காழி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 19 நகர பஸ்களும், சில தனியார் பஸ்களும் மட்டுமே கிராம பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் பெருகிய நிலையில் கிராமபுற ஏழை எளிய மக்கள் பஸ்கலை மட்டுமே இன்றளவும் நம்பியுள்ளனர். குறிப்பாக காலை பள்ளி, கல்லூரி, வேலை வாய்புக்காக நகர்பகுதிக்கு செல்ல போதிய எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்படாததால் பஸ்ஸின் படிகட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை தொடர்கின்றனர். ஒரு நகர பஸ்ஸில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைத்து செல்வதால் அதிக கூட்ட நெரிசலுடன் ஆபத்தும் தொடர்கிறது.

எனவே கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமாவது கிராம புறங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews