''ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின், அதை நம்பிய அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 'அல்வா' கொடுத்து விட்டார்,'' என, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வால், சிறு, குறு தொழில் செய்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்கள் மீது மேலும் மேலும் வரிச்சுமையை ஏற்றுவது தான் திராவிட மாடலா.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர், அமைச்சர்கள் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியில் உள்ளன.
பழனிசாமிக்கு இருப்பது, 'டெம்ப்ரவரி' பதவி தான். விரைவில், அவர் பொதுச் செயலராவார். அவர் தலைமையில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும். காங்., - எம்.பி., ராகுல் இளம் தலைவர். அவரது பாதயாத்திரை, காங்.,க்கு பலன் தருமா என தெரியவில்லை. அவருக்கு பலன் தரும்.முதல்வர் ஸ்டாலின், 'நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன்' என்கிறார். அதை கேட்டால் சிரிப்பு வருகிறது. போட்டோவுக்கு போஸ் கொடுத்து, 'டிவி'யில் முகத்தை தான் காட்டுகிறார்.
இப்படி பேசி, சினிமாவில் நடிகர் வடிவேல் இல்லாத குறையை முதல்வரும், அமைச்சர்களும் போக்குகின்றனர்.'நீட்' தேர்வை தி.மு.க., ரத்து செய்யும் என்று மாணவர்களை குழப்பியதால் தான் தேர்ச்சி குறைந்துள்ளது. திட்டங்களை நிறைவேற்ற நிதியில்லை என்கிறார் முதல்வர். எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வருக்கு கஜானாவில் பணம் இருக்கிறதா, இல்லையா என தெரியாமலா 'மதுவிலக்கு இல்லாத மாநிலமாக மாற்றுவேன்' என, உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.