தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் சதவீதம்: பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 12, 2022

Comments:0

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் சதவீதம்: பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்வளவு சதவீதம் தெரியுமா?: பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல்

Percentage of government school students who wrote NEET in Tamil Nadu: School Education Department new information

தமிழ்நாட்டில் 12,840 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 17,972 பேர் தேர்வெழுத பதிவு செய்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; அதில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

நீட் எழுதிய விருதுநகர், விழுப்புரம், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை அரசுப்பள்ளி மாணவர்கள் அனைவரும் (100 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய 7 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20 முதல் 25 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை பொறுத்தவரை நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள் 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews