எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் கல்வி தரம் உயராது - ஆசிரியர் கூட்டணி மூத்த நிர்வாகி அளித்த சிறப்பு பேட்டி - Literacy program does not raise educational standards - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 30, 2022

Comments:0

எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் கல்வி தரம் உயராது - ஆசிரியர் கூட்டணி மூத்த நிர்வாகி அளித்த சிறப்பு பேட்டி - Literacy program does not raise educational standards

எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் கல்வி தரம் உயராது - ஆசிரியர் கூட்டணி மூத்த நிர்வாகி அளித்த சிறப்பு பேட்டி - Literacy program does not raise educational standards - Exclusive interview with Senior Executive of Teachers Alliance

எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் மாணவர்களின் கல்வியின் தரம் உயராது என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகி அண்ணாமலை ஈடிவி பாரத்திற்கு போட்டியளித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மிகவும் குறைவாக மதிப்பெண்களை பெறுகின்றனர் என்பதால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நடத்தும் பாடம் புரிகிறதா என்பதை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இதுகுறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த நிர்வாகி அண்ணாமலை ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு பின்னர் பள்ளிகள் திறந்த மூன்றாவது நாள் முதல் மாணவர்களின் கற்றல் அறிவு திறனை பள்ளி கல்வித்துறை செயலாளர் உள்ளீட்டு அதிகாரிகள் ஆய்வு செய்துவந்தனர்.கரோனா தொற்றுக்கு பின் மூன்றாம் வகுப்பில் சேரும் மாணவர் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பிற்குரிய எந்தவித பாடத்தையும் படிக்காமல் நேரடியாக சேருகிறார்.

அதேபோல மூன்றாம் வகுப்பு படித்த மாணவர் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பில் பாடங்களை படிக்காமலேயே ஆறாம் வகுப்பில் நேரடியாக சேருகிறார். இதுபோன்ற மாணவர்களிடையே ஆய்வு செய்து அவர்கள் சரியாகப் படிக்கவில்லை என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் கூறுகிறார்.

பள்ளியில் காலை வகுப்பிற்கு சென்றவுடன் மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யவே ஆசிரியர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு புள்ளி விபரம் தகவல்களை கேட்கின்றனர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்று புள்ளி விபரங்களை தயாரித்து அளிக்கும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்து, கற்பிக்கும் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் பள்ளிக்கல்வித்துறையால் தயாரித்து ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்திலிருந்து பாடங்களை நடத்தாமல் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தில் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் யூகேஜி மாணவருக்கு கற்பிக்கும் பாடம் கற்பிக்கப்படுகிறது.

இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்கும் திறன் பெரிதும் பாதிக்கும். மேலும் தற்காலத்தில் குழந்தைகளிடம் செல்போனை கொடுத்தாலே அவர்கள் தங்களுக்கு தேவையான விபரங்களை தேடுகின்றனர். அதுபோன்ற குழந்தைகளுக்கு மிகவும் குறைந்த அளவில் படம் காட்டி ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். இந்த செயல்முறையினால் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை எதிர்காலத்தில் மிகவும் பின்னோக்கி செல்லும்.வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்து பள்ளிகளில் புள்ளி விபரம் தகவல் அளிக்கும் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவித்தால் ஆறு மாதத்தில் தமிழ்நாட்டில் பின்தங்கியுள்ளது என்ற கல்விமுறையை மீண்டும் பழைய நிலைக்கு ஆசிரியர்கள் கொண்டு வருவார்கள் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews