6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை - சுற்றறிக்கை - முதன்மைக்கல்வி அலுவலகம், விழுப்புரம் மாவட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 19, 2022

Comments:0

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை - சுற்றறிக்கை - முதன்மைக்கல்வி அலுவலகம், விழுப்புரம் மாவட்டம்

IMG_20220919_140506
IMG_20220919_140439
விழுப்புரம் மாவட்டத்தின் பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்தும் நோக்கத்தை இலக்காகக்கொண்டு, அந்த இலக்கை அடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை நல்கி காலாண்டுத் தேர்வை நன்முறையில் நடத்தி மதிப்பீடு செய்து மாணவர்களின் நிலை அறிந்து தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க முழு முயற்சியோடு காலம் கருதாது கற்பித்தல் பணியை மேற்கொண்டுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்திட திட்டமிட்டு செயல்படும் வகையில் காலாண்டுத் தேர்வை கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி சிறப்பாக நடத்தி மதிப்பீடு செய்திட வேண்டுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

1. மாணவர்களிடம் பொதுத்தேர்வு தொடர்பான அச்சத்தை போக்கிடும் வகையில் காலாண்டுத் தேர்வை எவ்வித புகாருக்கும் இடமின்றி ஒரு முன்மாதிரி பொதுத்தேர்வாக நடத்தி விழுப்புரம் மாவட்ட தேர்ச்சி விழுக்காட்டினை உயர்த்திட தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2. 6,7,8,9 காலாண்டுத் தேர்வு வினாத்தாட்கள் மாவட்ட தேர்வு குழுவால் வடிவமைக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. எனவே, மிகுந்த கவனத்துடன் தேர்வுகள் நடத்தவேண்டும்.

3. காலாண்டுத்தேர்வுக்கு மாணவர்களுக்கு தேர்வு அறை ஒதுக்கீடு, ஆசிரியர்களுக்கு தேர்வுஅறை ஒதுக்கீடு, தேர்வுக்கு வருகை தராதோர், விடைத்தாள் கட்டுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் போன்றவை தொடர்பாக உரிய பதிவேடு பராமரிக்க வேண்டும்.

4. தேர்வு நாளன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை அவரவர் வினாத்தாள் கட்டுக் காப்பக மையத்தில் வினாத்தாள் கட்டுகள் வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வினாத்தாட்களை பாதுகாப்பான முறையில் பெற்றுச் செல்லுமாறு அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலதாமதம் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

5.காலாண்டுத்தேர்வுக்குரிய பாடத்திட்டம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

6. சுயநிதி/மெட்ரிக் பள்ளிகள் மாவட்ட அளவில் வழங்கப்படும் வினாத்தாட்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தன்னிச்சையாக செயல்பட்டால் துறை நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிவிக்கலாகிறது.

7. 6,7,8,9 வகுப்புகளுக்கான தேர்வுகள் ஆண்டு பொதுத் தேர்வைப்போல வகுப்பறைக்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப தேர்வு அறைகளை அமைக்கவேண்டும்.

8. பொதுத் தேர்வைப்போல தேர்வு தொடங்குவது முதல் முடியும் வரை மணி அடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

9. தேர்வுகால அட்டவணையை அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்பறைகளிலும், அறிவிப்பு பலகைகளிலும் கண்டிப்பாக தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்.

எனவே அனைத்து தலைமை ஆசிரியர்களும் தேர்வினை நன்முறையில் நடத்தி மாணவர்கள் கற்றல் திறன் அறிந்து அதற்கேற்ப பயிற்சியளித்து நமது மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காட்டினை உயர்த்த ஆசிரியர்களுடன் இணைந்து பாடுபட வேண்டுமென அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு (1)6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை

(2) பாடத்திட்டம்
IMG_20220919_140426

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84605129