Should school students be banned from riding two-wheelers? - பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது...தடுக்கப்படுமா?
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் அஜாக்கிரதையாக செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. மாணவர்களின் உயிரிழப்பைத் தடுக்க போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் வாகன எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. வாகன பெருக்கத்திற்கேற்ப சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. சில பெற்றோர்கள் பெருமைக்காக தங்கள் பிள்ளகைளிடம் வாகனத்தைக் கொடுத்து ஓட்ட விடுகின்றனர்.மாணவர்கள் ஒரே வாகனத்தில் 2 அல்லது 3 பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக செல்கின்றனர். போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர்.
வாகன நெரிசல் அதிகமாக உள்ள சாலையில் கூட, வேகமாகச் செல்கின்றனர். இதனால், சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க தமிழக போக்குவரத்துத்துறை 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199 (ஏ)ன்படி உரிய ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் பெறாமல் 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
மேலும், வாகனம் ஓட்டிய சிறுவர்களின் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற இயலாது என கூறப்பட்டுள்ளது.ஆனால், இந்த விதிமுறைகளை விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் கண்காணிப்பது இல்லை. இதனால், கடந்த 13ம் தேதி விழுப்புரம் அடுத்த சிந்தாமணியில் பைக்கில் சென்ற அரசு பள்ளி மாணவர், கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.அதன் பிறகும், மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் பள்ளி மாணவர்கள் செல்வதை தடுப்பதில் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் விபத்தில் மாணவர்கள் சிக்கி உயிரிழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் மாவட்டத்தில் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைத் தடுக்க வேண்டும். இதை மீறும் மாணவர்களின் பெற்றோர்கள் மீது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளிடம் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.