சென்னை: 2021ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு புதியப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றி வடிவமைத்து உள்ளது.
அந்த வகையில், முதலாமாண்டு மாணவர்களுக்குப் புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழர் மரபு மற்றும் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகியப் பாடங்கள் முதல் மற்றும் இரண்டாவது பருவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.கட்டாயம் இந்தப் பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”2021ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களுக்குப் புதியப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
தமிழர் மரபு மற்றும் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகியப்பாடங்கள் முதல் மற்றும் இரண்டாவது பருவத்தில் நடப்பாண்டு கல்வியாண்டு(2022) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்டாயம் இந்தப் பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சிப்பெற வேண்டும். இந்தப் பாடங்களை மாணவர்கள் தமிழில் எழுத வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் சிபிஎஸ்இ முடித்த மாணவர்கள் இந்தப்பாடங்களை ஆங்கிலத்தில் எழுதுவதற்கும் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு, மற்றும் உறுப்பு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பாடங்களை வரும் கல்வியாண்டு முதல் பயில உள்ளனர். தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் வரும் ஆண்டிலோ அல்லது அடுத்த ஆண்டில் தமிழர் மரபு மற்றும் தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை தங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு அரசே வழங்க உள்ளது.
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவினை அளிக்கும் வகையில் மொழிப்பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. மேலும், சிறப்பாக ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கு பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானியம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளை மாணவர்கள் கற்பதற்கும் புதியப் பாடதிட்டத்தில் வழிவகை செய்துள்ளது” எனப் பேசினா

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.