முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: வேளாண் பல்கலை. அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 10, 2022

Comments:0

முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: வேளாண் பல்கலை. அறிவிப்பு

முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1958-ம் ஆண்டு எம்.எஸ்சி படிப்புகள் தொடங்கப்பட்டன. 1960-ம் ஆண்டு முனைவர் (பி.ஹெச்டி) படிப்புகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் சார்பில், கோவை, மதுரை, மேட்டுப்பாளையம், திருச்சியில் 2 இடங்கள், தேனி, கிள்ளிக்குளம் உள்ளிட்ட 8 கல்லூரிகளில் உள்ள, 32 துறைகளில் எம்.எஸ்சி முதுநிலை பட்டப்படிப்பும், 28 துறைகளில் முனைவர் (பி.ஹெச்டி) பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகிறது.

இரண்டாண்டுகளை கொண்ட முதுநிலை பட்டமேற்படிப்பில் 400 இடங்களும், மூன்றாண்டுகளை கொண்ட முனைவர் பட்ட மேற்படிப்பில் 200 இடங்களும் உள்ளன. நடப்புக் கல்வியாண்டு முதுகலை மற்றும் முனைவர் படிப்பக்கான மாணவர் சேர்க்கை செயல்முறை கடந்த ஜூன் மாதம் இறுதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://admissionsatpgschool.tnau.ac.in இணையதளம் மூலம் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததது. முதுநிலை பட்டமேற்படிப்புக்கு வரும் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்க பல்கலைக்கழகத்தின் சார்பில் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதுநிலை பட்ட மேற்ப்படிப்புக்கான இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 16-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இளநிலை, முதுநிலை முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பு சான்றிதழ் மூலமாகவும், தற்பொழுது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழக பதிவாளர் அல்லது கல்லூரி முதல்வர்களிடம் பெற்ற படிப்பு முடிவுற்ற சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். எனினும் பட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews